லாகூர்,
உலக அளவில் மிக மாசடைந்த ஆறுகளை பற்றி யோர்க் பல்கலை கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதன்படி, சர்வதேச அளவிலான 258 ஆறுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 1,052 மாதிரிகள் எடுத்து கொள்ளப்பட்டன.
இதில், பாகிஸ்தானின் ராவி ஆற்றில், லிட்டர் ஒன்றுக்கு 189 மைக்ரோகிராம் அளவுக்கு பொருட்கள் கலந்து உள்ளது தெரிய வந்துள்ளது. அவற்றில், பெருமளவில் பாராசிட்டாமல், நிகோடின், கேபீன் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவை உள்ளன.
புலவர்கள் மற்றும் ஓவியர்களால் வர்ணிக்கப்பட்ட ராவி ஆறு, மனிதர்கள் மற்றும் ஆலை கழிவுகளால் சாக்கடை போல் உருமாற்றம் அடைந்து உள்ளது என தி நியூஸ் இன்டர்நேசனல் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது தவிர்த்து பாகிஸ்தானில் உள்ள சிறிய மற்றும் பெரிய நீர்நிலைகளும் இதுபோன்று மாசடைந்து காணப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.