உலக செய்திகள்

அமெரிக்காவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி 6 பேர் பலி

அமெரிக்காவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 6 பேர் பலியாயினர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மேற்கு ஹூஸ்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

விமானத்தை அதன் உரிமையாளரும், விமானியுமான ஜெப்ரே வெயிஸ் (வயது 65) இயக்கினார். அவருடன் இந்த விமானத்தில் 5 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் கெர்வில்லே நகரில் உள்ள விமானநிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் அந்த விமானம் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பண்ணை நிலத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த கோரவிபத்தில் ஜெப்ரே வெயிஸ் உள்பட விமானத்தில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்