உலக செய்திகள்

ரஷிய தலையீடு குறித்த விசாரணை: ‘தனக்கு தானே மன்னிப்பு வழங்க அதிகாரம் உண்டு’ டிரம்ப் உறுதி

எனக்கு நானே மன்னிப்பு வழங்கும் அதிகாரம் எனக்கு உண்டு என ரஷிய தலையீடு குறித்த விசாரணயில் டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க நீதித்துறை சிறப்பு அதிகாரி ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழு முன் டிரம்ப் ஆஜராவது தொடர்பாக, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்த விசாரணையில், ஜனாதிபதி என்ற முறையில் தனக்கு தானே மன்னிப்பு வழங்கும் அதிகாரம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ஏராளமான சட்ட வல்லுனர்கள் கூறியிருப்பது போல, எனக்கு நானே மன்னிப்பு வழங்கும் அதிகாரம் எனக்கு உண்டு. ஆனால் நான் எந்த தவறும் செய்யாத போது அதை ஏன் செய்ய வேண்டும்? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இந்த விசாரணையை அவர் குறை கூறவும் செய்துள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை