உலக செய்திகள்

சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி வாபஸ் இல்லை: டிரம்ப் திட்டவட்டம்

சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி வாபஸ் இல்லை என டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 பில்லியன் அமெரிக்க டாலர்(சுமார் ரூ.32,500 கோடி) அளவிற்கு தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்ப பொருட்களின் மீது 25 சதவீத கூடுதல் வரி விதிப்பதாக கடந்த மாத மத்தியில் ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும், அமெரிக்காவில் இருந்து தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் 545 முக்கிய பொருட்களுக்கு 34 பில்லியன் டாலர்கள் அளவிற்கு கூடுதல் வரியை விதித்தது. இதையடுத்து டிரம்ப், சீன பொருட்களுக்கு மேலும் 200 பில்லியன் டாலர்கள் மதிப்பில் கூடுதல் வரியை அண்மையில் சீன பொருட்களுக்கு விதித்தார். இதற்கு சீனாவும் தக்க பதிலடி கொடுத்தது.

இந்த நிலையில், டிரம்ப் அமெரிக்காவின் பாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இந்த விஷயத்தில் சீனா உடன்பாடு காண விரும்பினால் அதுபோல் அமெரிக்காவும் நடந்துகொள்ளும். ஆனால் இது அமெரிக்காவுக்கு நியாயம் கிடைக்கும் உடன்பாடாக இருக்கவேண்டும். இல்லையென்றால் சீனப் பொருட்கள் மீதான கூடுதல் வரியை அமெரிக்காவால் 500 பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்க இயலும். அதே நேரம் சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இதுவரை இல்லை என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்