உலக செய்திகள்

பெரியதும் சக்திவாய்ந்ததுமான பட்டன் என்னிடமும் உள்ளது வடகொரிய அதிபருக்கு டிரம்ப் பதிலடி

பெரியதும் சக்திவாய்ந்ததுமான பட்டன் என்னிடமும் உள்ளது வடகொரிய அதிபருக்கு டிரம்ப் பதிலடி கொடுத்து உள்ளார்.#NuclearButton #DonaldTrump

தினத்தந்தி

வாஷிங்டன்,

புத்தாண்டையொட்டி வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங் டெலிவிஷனில் உரை நிகழ்த்திய போதுஅணு ஏவுகணை பொத்தான் எந்த நேரமும் எனது மேஜையில்தான் உள்ளது என்றும் எனவே அமெரிக்காவால் எங்களை மிரட்ட முடியாது.

உலகில் எந்த நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்த முடியும். குறிப்பாக அமெரிக்காவை தாக்கி முழுமையாக அழிக்க முடியும் என பேசினார்.

வடகொரிய அதிகாரியின் மிரட்டலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டுடிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார். அதில், வடகொரிய அதிபர் கிம் ஜாங்- யங் தனது மேஜையில் அணு ஆயுத தாக்குதல் பட்டன் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

அவரது ஆட்சியில் உணவின்றி மக்கள் படடினியால் இறக்கும் நிலை உள்ளது. என்னிடமும் அணு ஆயுத பட்டன் உள்ளது என்று அவரிடம் தெரிவியுங்கள். ஆனால் இது அவரது பட்டனை விட மிகப் பெரியது.அதிக சக்தி வாய்ந்தது.

என்னிடம் உள்ள பட்டனும் வேலை செய்யும். அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்