நியூயார்க்,
ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அண்டோனியோ கெடரெஸ், காஷ்மீரில் நடைபெறும் எல்லை மீறிய தாக்குதல்களை மிக நெருக்கமாக கவனித்து வருவதாகவும், இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தீர்க்க ஐ.நா. ஊக்குவிக்க வேண்டும் எனவும் கெடரெஸ் கூறியதாக ஐ.நா. செய்தி தொடர்பாளர் கூறினார்.
இது குறித்து ஐ.நா சபையின் பொது செயலாளர் ஸ்டீபன் டூஜரிக் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு நாடுகளுக்கிடையேயான எல்லை மீறிய தாக்குதல்களை நாங்கள் மிகவும் நெருக்கமாக கவனித்து வருகிறோம். இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளை சமாதான முறையில் தீர்க்க நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். பேச்சுவார்த்தை குறித்து இரு நாட்டு பிரதமர்களிடம் அறிக்கை இன்னும் ஏதும் வெளியிடவில்லை எனக் கூறினார்.