உலக செய்திகள்

ரூஹானி வெற்றி: “சீர்குலைவு சக்திகளுக்கு” ஆதரவளிப்பதை ஈரான் நிறுத்த வேண்டும் - அமெரிக்கா

மீண்டும் நான்காண்டுகளுக்கு அதிபராக தேர்வு செய்யப்பட்ட ரூஹானி “சீர்குலைவு சக்திகளுக்கு” கொடுத்து வரும் ஆதரவை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறினார்.

தினத்தந்தி

வாஷிங்டன்

சவூதி அரேபியாவில் அதிபர் டிரம்புடன் சுற்றுப்பயணம் செய்து வரும் டில்லர்சன், உலகின் இதர நாடுகளுடன் உறவை மேம்படுத்த வேண்டுமென்றால் ஈரான் சீர்குலைவு சக்திகளுக்கான ஆதரவை நிறுத்த வேண்டும், உள்நாட்டில் ஜனநாயக சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்றார்.

டிரம்பின் ஈரான் கொள்கை பெரிதளவில் மாறுவதற்கு வாய்ப்பில்லை என்றும் சில நிபுணர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. ரூஹானி லெபனனின் ஹிஸ்புல்லா தீவிரவாதக் குழு, சிரியா அதிபர் அஸாத், யேமனின் ஹூதி போராளிகள் ஆகியோருக்கான ஆதரவை நிறுத்த வேண்டும். அத்துடன் ஈரானின் ஏவுகணை ஆய்வு திட்டத்தையும் கைவிட வேண்டும் என்பதையே டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்துகிறது. இத் தேர்தல் மூலம் ஈரான் மக்களுக்கு அவர்கள் விரும்புகிற வகையில் உரிமைகளையும், கருத்து சுதந்திரமும் கிட்டுவதை ரூஹானி நிறுவுவார் என்றே அமெரிக்க எதிர்பார்க்கிறது என்றார் டில்லர்சன்.

அமெரிக்காவுடன் பேசி பொருளாதாரத் தடைகளை குறைக்க சம்மதித்த ஈரானின் தலைமை மத குரு காமேனி சம்மதித்தாலும், உள்நாட்டில் தனிநபர் சுதந்திரம் தொடர்பான விஷயங்களில் அவரது முடிவுகளுக்கு சம்மதிக்கவில்லை.

ஐஎஸ் படைகளை எதிர்த்து ஈரானும், அமெரிக்காவும் தனித்தனியே போரிட்டாலும் சவூதி அரேபியா போன்ற தனது சகாக்களின் வேண்டுதலால் அமெரிக்கா ஈரானுடன் நேரடியாக இணைந்து பணிபுரிய விரும்பவில்லை. ஐஎஸ் படைகள் தோற்கும் நிலையில் ஈரானும், அமெரிக்காவும் அப்பிரதேசத்தில் மோதிக்கொள்ளும் சூழல் எழுந்து வருகிறது. மேலும் ஐரோப்பா நாடுகள் பலவும் ஈரானுடன் மோதல் போக்கை விரும்பாதவையாகவுள்ளன. இதனால் டிரம்பிற்கு ஈரான் மீது கடுமைக்காட்ட முடியாது. ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகளை அமெரிக்கா திறந்தே வைத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்வாறு சூழ்நிலைகள் இருந்தாலும் ஈரானின் ஏவுகணை திட்டத்திற்கு உதவும் அந்நாட்டு நிறுவனங்கள், தனிநபர்கள் மீது தடைகளை அமெரிக்க தொடர்ந்து நீடிக்கும் என்றே தெரிகிறது.

ரூஹானிக்கு மோடி வாழ்த்து

ரூஹானியின் திறமையான தலைமையின் கீழ் ஈரான் புதிய உச்சங்களை அடையும்; ஈரானுடனான நமது தனித்ததொரு உறவை பலப்படுத்துவதில் உறுதியோடு இருக்கிறோம் என்று தனது வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு