கராக்கஸ்,
பெண் தலைவரான இவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஏற்றுக்கொண்டுள்ளார். தற்போது துணை மந்திரி பதவியில் உள்ள சாமுவேல் மன்கடா புதிய வெளியுறவு மந்திரியாக நியமிக்கப்படுகிறார்.
வெனிசூலாவில் புதிதாக உருவாக்கப்பட உள்ள அரசியல் நிர்ணய சபைக்கு அடுத்த மாதம் 30-ந் தேதி நடக்கிற தேர்தலில், டெல்சி ரோட்ரிக்ஸ் போட்டியிட உள்ளார். இந்த தேர்தலை பிரதான எதிர்க்கட்சி புறக்கணிக்கிறது.