புதுச்சேரி

திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஓட்டல் ஊழியர் தற்கொலை

காலாப்பட்டு அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஓட்டல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

காலாப்பட்டு

திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஓட்டல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருமண ஏற்பாடு

புதுவையை அடுத்த பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் ஆனந்தன். அவரது மனைவி சுந்தரி. அவர்களது மகன் சரண் (வயது 32). கேட்டரிங் படிப்பு படித்து விட்டு, புதுவையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், புதுவையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஜூன் மாதம் 1-ந்தேதி இவர்களது திருமணம் நடப்பதாக இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு சரண் தூங்க சென்றார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இன்று காலை நீண்டநேரமாகியும் அவரது அறை திறக்கவில்லை. கதவை நீண்ட நேரம் தட்டிப்பார்த்தும் திறக்காததால் சந்தேகம் அடைந்த தாயார் சுந்தரி அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சரண் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காலாப்பட்டு போலீசார் அங்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

இதற்கிடையே சரண் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் 'தனக்கு அதிகமான வயிற்று வலி இருப்பதால் அனைவரையும் விட்டு பிரிந்து செல்கிறேன், என்னை மன்னித்து விடுங்கள்' என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த வாரம் திருமணம் நடக்க இருந்த நிலையில் ஓட்டல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்