ஆன்மிகம்

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ஆடித்தபசு காட்சி

ஆடித்தபசு காட்சியின்போது சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தினத்தந்தி

கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் உள்ள மூலஸ்தான கருவறையில் குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான ஐந்தரை அடி உயர சிவலிங்க சிலை அமைந்து உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆடி தபசு காட்சி நேற்று நடந்தது.

இதையொட்டி நேற்று இரவு 7 மணிக்கு தீபாராதனையும் அதைத்தொடர்ந்து, 7.15 மணிக்கு தபசு காட்சியும் நடந்தது. அப்போது சுவாமியும் அம்பாளும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இரவு 8.30 மணிக்கு பள்ளியறை எழுந்தருளிய நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. 

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்