ஆன்மிகம்

ஒரே சமயத்தில் இரண்டு ரிஷப வாகனங்கள்.. சுவாமி, அம்பாள் எழுந்தருளிய அற்புத காட்சி

தனித்தனி ரிஷப வாகனங்களில் எழுந்தருளிய சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது.

தினத்தந்தி

ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்மாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திரப் பெருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலையில் சுவாமி, அம்பாள் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். இதன் பின்னர் சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. மாலையில் முத்துக்குமார் குழுவினரின் சிறப்பு நாதஸ்வர இசையும், செந்தூர் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தன.

இரவில் தனித்தனி ரிஷப வாகனங்களில் எழுந்தருளிய சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. பூஜை வைபவங்களை சுரேஷ் பட்டர், விக்னேஷ் சிவம் குழுவினர் நடத்தினர்.

நாடார் மண்டகப்படிகாரர்கள் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்