கோப்புப்படம் 
ஆன்மிகம்

பவுர்ணமியையொட்டி சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி

சதுரகிரி கோவிலில் பவுர்ணமி வழிபாட்டிற்காக பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை 4 நாட்கள் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மலையேற அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக திடீரென மழை பெய்து நீரோடைப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தால் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும். பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்