கோப்புப்படம்  
ஆன்மிகம்

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா: நாளை தொடங்குகிறது

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தினத்தந்தி

ராமேசுவரம்,

இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே உள்ள கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசால் கச்சத்தீவில் புதிதாக அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டு அதில் திருவிழாவும் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 5 மணி அளவில் ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் மற்றும் ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ ஆகியோர் அந்தோணியாரின் திரு உருவம் பதித்த கொடியை ஏற்றுகின்றனர். தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி சிலுவை பாதை திருப்பலி நடைபெறும். இரவு 8 மணி அளவில் அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை இலங்கை கடற்படை மற்றும் இருநாட்டு பக்தர்களும் சேர்ந்து தோளில் சுமந்து, ஆலயத்தை சுற்றிவரும் தேர் பவனி நடக்கிறது.

நாளை மறுநாள் காலை 7 மணி அளவில் திருவிழா திருப்பலி நடக்கிறது.கச்சத்தீவு ஆலய திருவிழாவுக்கு ராமேசுவரத்தில் இருந்து 78 விசைப்படகுகளும், 23 நாட்டுப்படகுகளும் சல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 3,424 பேர் பதிவு செய்துள்ளனர். நாளை காலை 6 மணியில் இருந்து போலீசாரின் சோதனைக்கு பின்னர் ஒவ்வொரு படகாக வரிசை எண் அடிப்படையில் கச்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கின்றன.

திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் 5 நாட்கள் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக ராமேசுவரம் துறைமுக பகுதியில் நேற்று 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்