ஆன்மிகம்

கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்

வைகாசி திருவிழாவில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அம்மன் வீதியுலா நடைபெற்றன.

தினத்தந்தி

ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா, கடந்த 11-ம் தேதி பூச்சொரிதல் நிகழ்வுடன் தொடங்கியது. 18-ம் தேதி கொடி ஏற்றத்துடன் காப்பு கட்டுதல் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மன் வீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அம்மன் வீதியுலா நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 26-ம் தேதி மாலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட முத்து மாரியம்மன், பேச்சியம்மன், வாழவந்த பிள்ளையார் ஆகிய உற்சவர்களை தனித்தனி தேரில் எழுந்தருளச் செய்தனர். சிறுவர்கள் பிள்ளையார் தேரையும், பெண்கள் பேச்சியம்மன் தேரையும், பொதுமக்கள் முத்து மாரியம்மன் தேரையும் இழுத்தனர்.

27-ம் தேதி மஞ்சள் விளையாட்டு (தீர்த்தம்), 28-ம் தேதி புஷ்ப பல்லக்கு வீதியுலாவைத் தொடர்ந்து, நேற்று இரவு (29-ம் தேதி) தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. தெப்பக்குளத்தின் கரைகளில் ஏராளமான மக்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர். தெப்ப உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி