ஆன்மிகம்

முத்துக்குமாரபுரம் துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தினத்தந்தி

விளாத்திகுளம் அருகே உள்ள முத்துக்குமாரபுத்தில் உள்ள துர்க்கையம்மன், வரசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை பூஜைகள் தொடங்கின.

இன்று காலை இறுதிக்கட்ட யாக சாலை பூஜையின்போது விசேஷ திரவியங்கள், பட்டு வஸ்திரங்கள் ஹோமத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், விசேஷ தீபாராதனை என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து காலை 9 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரை வரசித்தி விநாயகர் கோவில் மற்றும் துர்க்கை அம்மன் கோவில் விமான கலசங்களுக்கு ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், திருநீறு, இளநீர், தயிர், என பல வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்