ஆன்மிகம்

ராவணன் உருவாக்கிய நகுலேஸ்வரம்

கிருதாயுகத்தில் தோன்றிய தலம், இலங்கை நாட்டின் பழம்பெரும் ஆலயம், பஞ்சேஸ்வரத் தலங்களுள் முதன்மையானது.

தினத்தந்தி

உள்பிரகாரத்தில் உற்சவமூர்த்திகள் அறை அமைந் துள்ளது. இதில் விநாயகர், பிரதோஷ மூர்த்தி, இலங்கையின் பெரிய வடிவிலான சோமாஸ்கந்தர் தனி அறையிலும், வழக்கத்திற்கு மாறாக கூப்பிய செஞ்சடையோடு காட்சிதரும் அபூர்வ நடராஜர் மகா மண்டபத்தின் தனிச்சன்னிதியிலும் வீற்றிருக்கின்றனர்.

மாசிமாதம் மகாசிவராத்திரியை முன்னிட்டு 15 நாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. மகா சிவராத்திரியன்று காலை தேரோட்டம் நடைபெறுகிறது. இதுபோல, பங்குனி சித்திரையில், நகுலாம்பிகைக்கு 10 நாட்கள் பிரம்மோற்சவமும் சித்திரை ஒன்றாம் நாள் தேரோட்டமும் நடத்தப்படுகிறது.

ஆடி அமாவாசையன்று மாவைக்கந்தன் எழுந்தருளல், நவராத்திரி புரட்டாசி சனி, ஐப்பசியில் கேதார கவுரி விரதம், ஐப்பசி கடைசி வெள்ளிக்கிழமை எம சம்ஹார விழா, விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம், கிருத்திகை உள்ளிட்ட அனைத்து விழாக்களும் சிறப்போடு நடத்தப்படுகின்றது. இவ்விழாக்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டுச் செல்வார்கள்.

பலன் தரும் பரிகாரத்தலம்


இத்தலம் காசி மற்றும் ராமேஸ்வரத்திற்கு இணையான தலமாகப் போற்றப்படுகிறது. இங்கே வந்து தலத் தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டு சென்றால், அனைத்துவித தோஷங்களும் நீங்கி பலன் பெறலாம். இந்நாட்டில் உள்ள சிங்களவர்களும் வந்து செல்வது இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதேபோல, சனிக்கிழமைகளில் நீராடி வணங்கிச் செல்வது வழக்கமாக உள்ளது. சனிதோஷம் நீங்க, காலசர்ப்பதோஷம் நீங்க, பித்ருக்கள் சாபம் நீங்க, தீர்த்தமாடி வழிபடுவது நல்ல பலனைத் தரும். மகப்பேறு பெற உகந்த தலம் இது. குழந்தை பெற்றவர்கள் தங்கள் குழந்தையைத் தத்து கொடுத்து, பின் காணிக்கை செலுத்தி குழந்தையை திரும்பப் பெற்றுக் கொள்வது இன்றும் நடைமுறையில் உள்ளது.

எண்ணற்ற சைவப்பெருமக்கள் தங்கள் பித்ருக் கடன்களை கீரிமலைத் தீர்த்தத்தில் செலுத்தி வருகின்றனர். அதன்பின் ஆலயம் சென்று மோட்ச தீபம்ஏற்றி, ஆத்ம சாந்தி பிரார்த்தனை செய்து வேண்டுதலை, நிறைவு செய்கின்றனர்.

இந்த ஆலயத்தில் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம்.

அமைவிடம்

யாழ்ப்பாணம் மாவட்டம், தெல்லிப்பழை வட்டத்தில் நகுலேஸ்வரம் எனும் கீரிமலை அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து வடக்கே 400 கி.மீ., யாழ்ப்பாணத்தில் இருந்து வடக்கே 19 கி.மீ., காங்கேயன் துறைமுகத்தில் தென்மேற்கே 3 கி.மீ., இளவாலையில் இருந்து கிழக்கே 1 கி.மீ., பலாலி விமான நிலையத்தில் இருந்து மேற்கே 6 கி.மீ., மாவிட்டபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது.

பனையபுரம் அதியமான்

பஞ்சேஸ்வரம்

சிவபெருமானுக்காக இலங்கையைக் காக்க, ஐந்து திசைகளில் எழுப்பப்பட்ட பஞ்சேஸ்வரங் களில் ஒன்றாக நகுலேஸ்வரம் விளங்குகின்றது. வடக்கே யாழ்ப்பாணத்தில் நகுலேஸ்வரம், வடமேற்கே மன்னாரில் திருக்கேதீஸ்வரம், கிழக்கே திருகோணமலையில் திருகோணேச்சரம், மேற்கே புத்தளத்தில் முன்னேச்சுரம், தெற்கே மாத்துறையில் தொண்டீச்சரம் என ஐந்து சிவாலயங்கள், இலங்கை வேந்தன் ராவணனால் எழுப்பப்பட்டன. இதில் ஐந்தாவது தலம் கடலில் அமிழ்ந்துவிட்டது. அதற்கு சாட்சியாக நந்தி சிலை மட்டும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பதிலாக, தெய்வத்துறையில் சந்திரலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயம் எதிர்கொண்ட இன்னல்கள்

பதினேழாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் வசம் யாழ்ப்பணம் பகுதி வந்த போது, ஆலயம் முற்றிலுமாக சிதைக்கப்பட்டது. உள்நாட்டு யுத்த காலமான, 1990ம் ஆண்டு அக்டோபரில் தீபாவளி பண்டிகையையொட்டி, ஏராளமான பெண்கள் கேதார கவுரி விரத வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது விமானப்படை மற்றும் கடற்படையின் குண்டு மழைத் தாக்குதலால் மீண்டும் ஆலயம் பலத்த சேதம் அடைந்தது. அதன்பிறகு ஏழு ஆண்டுகளில் தொடர் முயற்சி மேற்கொண்ட, ஆலயத்தின் பிரதம குருவான ராஜ ராஜ ஸ்ரீ நகுலேஸ்வர குருக்கள் மற்றும் உலகளாவிய சைவப் பெருமக்களின் ஒத்துழைப்பால் 1998ல் புனரமைப்பு பணி தொடங்கியது. 2012ம் ஆண்டில் மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்