ஆன்மிகம்

சதுரகிரியில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற பிரதோஷ வழிபாடு

சதுரகிரி கோவிலில் பக்தர்களின்றி பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது.

தினத்தந்தி

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தாகள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர்மழையால் காட்டாறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சதுரகிரி சுந்தர மகாலிங்கசுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டது. எனவே சதுரகிரி கோவிலில் பக்தர்களின்றி பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது. 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்