சென்னை:
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசித்தால் சலக சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இன்று புரட்டாசி 3- வது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு இல்லாததால் இன்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.