ஆன்மிகம்

மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை தரிசன ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலையில் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (சனிக்கிழமை) தொடங்குவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

 திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நடப்பாண்டின் மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதியும் நடைபெறும். சீசனையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70 ஆயிரம் பக்தர்களும், உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 20 ஆயிரம் பக்தர்களும் என மொத்தம் 90 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.உடனடி தரிசன முன்பதிவு மையங்கள் பம்பா, நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியார் சத்ரம் ஆகிய இடங்களில் செயல்படும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்