சிறப்பு அலங்காரத்தில் கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் 
ஆன்மிகம்

மகாளய அமாவாசை நாளில் குலதெய்வ கோவில்களில் சிறப்பு வழிபாடு

மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன,

தினத்தந்தி

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில் மற்றும் குலதெய்வ கோவில்களில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், பகவதி அம்மன், கரூர் மெயின் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன், நன்செய்இடையாற்றில் உள்ள மாரியம்மன், மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் மற்றும் ராஜா சுவாமி, பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், அய்யம்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன்

மற்றும் பரமத்தி அங்காளம்மன், பொத்தனூர் மேற்கு வண்ணாந்துறையில் எழுந்தருளியுள்ள ஏரி கருப்பண்ணசாமி, பொத்தனூரில் உள்ள பச்சமலை முருகன், கபிலர் மலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனி ஆண்டவர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்கள், முருகன் கோவில்கள் மற்றும் குல தெய்வ கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்