ஆன்மிகம்

தேவகோட்டை சிவன் கோவிலில் தெப்ப உற்சவம்

அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி, தெப்பக்குளத்தில் மூன்று சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தினத்தந்தி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர சிவன் கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சித்திரை திருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமி, அம்பாள் வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கடந்த 5-ம் தேதி திருக்கல்யாணம், 6-ம் தேதி அறுபத்து மூவர் திருவீதி உலா, 9-ம் தேதி தேர் திருவிழா நடைபெற்றது. நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. கோவில் முன்பாக உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி மூன்று சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஒவ்வொரு படித்துறையிலும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தெப்பக்குளத்தை சுற்றி ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்து தெப்ப உற்சவத்தை கண்டுகளித்தனர். படித்துறையில் பெண்கள் அமர்ந்து விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்