ஆன்மிகம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தெப்ப உற்சவம் 7-ம் தேதி ஆரம்பம்

விழாவின் கடைசி மூன்று நாட்கள் பத்மாவதி தாயார் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தினத்தந்தி

திருப்பதி:

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை வருடாந்திர தெப்ப உற்சவ நடக்கிறது. விழா நாட்களில் உற்சவ மூர்த்திகள் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். தினமும் இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.

முதல் நாள் மாலையில் ருக்மணி, சத்தியபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரண்டாம் நாளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜசாமி தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். கடைசி மூன்று நாட்கள் (9, 10 மற்றும் 11-ம் தேதி) பத்மாவதி தாயார் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இந்த விழாவையொட்டி கல்யாணோற்சவம் மற்றும் ஊஞ்சல் சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்