ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடங்குகிறது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடங்குகிறது.

தினத்தந்தி

திருச்சி,

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும். இதில் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, வருகிற 30-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. இதில் பகல் பத்து உற்சவம் 31-ந்தேதி முதல், ஜனவரி 9-ந்தேதி வரையிலும், ராப்பத்து உற்சவம் ஜனவரி 10-ந்தேதி முதல், 20-ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?