கோப்புப்படம்  
சினிமா துளிகள்

அடுத்த படத்திற்கு ரெடியாகும் பார்த்திபன்

பார்த்திபன் தன் அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார்.

சென்னை,

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இரவின் நிழல் 'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வந்ததை அடுத்து சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் பாராட்டினார்.

இந்நிலையில், பார்த்திபன் தன் அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார். இதற்காக அவர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பார்த்திபன், "ஆடி ஆடி ஆடி ஆடி கூழ் ஊற்றி, கூல்-ஆய் ஆடி ஆடி நாடி நரம்பெல்லாம் எனர்ஜி நல்லா கூடி கூடி கூடி ரெடி ஆகிறான் ப்ளடி அடுத்தப் படத்திற்கு. எப்டி?" என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை