சினிமா துளிகள்

நடிகர் சித்தார்த்தின் ட்விட்டர் கணக்கை முடக்க சமூக ஆர்வலர் பிருந்தா அடிகே வலியுறுத்தல்

சாய்னா நேவால் குறித்த ட்விட்டர் பதிவிற்காக சித்தார்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரபல நடிகர் சித்தார்த்தின் இந்திய முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்த டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி வரும் வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இதற்கு சாய்னா நேவால், எந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டனம் செய்கிறேன் என பதிவு செய்திருந்தார்.

சாய்னா நேவாலின் இந்த கருத்திற்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவு பெண்களை கொச்சை படுத்தும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. சித்தார்த்தின் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

இந்நிலையில் சாய்னா நேவாலுக்கு பதிலளித்த நடிகர் சித்தார்த்தின் ட்வீட், பெண்கள் மீதான அவரது வெறுப்பை வெளிப்படுத்துவதாகவும், அது ஆபாசமானது என்றும் பெண்ணியவாதியும், சமூக ஆர்வலருமான பிருந்தா அடிகே தெரிவித்துள்ளார்.

மக்களின் அரசியல் கருத்துக்களைப் பொருட்படுத்தாமல், சாதனை படைத்த ஒரு பெண்ணைக் குறிவைத்து இதுபோன்ற மோசமான கருத்துக்களைக் கூறிய அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது ட்விட்டர் அவரது கணக்கை முடக்க வேண்டும் என்றும் பிருந்தா அடிகே குறிப்பிட்டுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு