நாடாளுமன்ற தேர்தல்-2024

பஞ்சாப், பீகார் மாநில வேட்பாளர்கள் தேர்வு: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை

பஞ்சாப், பீகார் மாநில வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணி குழு டெல்லியில் நேற்று கூடியது.

தினத்தந்தி

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அந்த வகையில் 7-வது கட்ட தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவை தொகுதிகளுக்கு ஜூன் 1-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பீகாரில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் 4 தொகுதிகளுக்கு கடந்த 19-ந் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. எஞ்சிய 36 தொகுதிகளுக்கு ஜூன் 1-ந் தேதி வரை 6 கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணி குழு டெல்லியில் நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர்களான சல்மான் கஹர்ஷித் மற்றும் அம்பிகா சோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் இரு மாநிலங்களுக்கும் பல பெயர்கள் விவாதிக்கப்பட்டதாகவும், முக்கிய இடங்கள் குறித்த இறுதி முடிவு காங்கிரஸ் தலைவருக்கு விடப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு