கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி: ராகுல், பண்ட் அரை சதம் விளாசல்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர்கள் ராகுல், பண்ட் அரை சதம் விளாசியுள்ளனர்.

தினத்தந்தி

ஜோகன்னெஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது.

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பார்ல் நகரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே பார்ல் நகரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இப்போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இந்தியா நெருக்கடியான சூழலில் களம் இறங்கியுள்ளது.

இந்த போட்டியில், தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடிய கேப்டன் ராகுல், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசினார். அவர் 55 (79) ரன்களில் வான்டெர் துஸ்சென்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தவான் (29), கோலி (0) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதேபோன்று மற்றொரு வீரரான ரிஷாப் பண்ட் அதிரடியாக அடித்து ஆடினார். அவர், 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என மொத்தம் 85 (71 பந்துகள்) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

தொடர்ந்து, இந்திய அணி 36 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

இரு அணி வீரர்கள் விவரம்:

இந்தியா: லோகேஷ் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் அய்யர், அஸ்வின், ஷர்துல் தாக்குர், புவனேஷ்வர்குமார், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

தென் ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ஜேன்மன் மலான், மார்க்ராம், பவுமா (கேப்டன்), வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், பெலக்வாயோ, கேஷவ் மகராஜ், ஷம்சி, லுங்கி இங்கிடி, சிஷண்டா மஹலா.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்