Image Courtesy: @ZimCricketv  
கிரிக்கெட்

2வது டி20: டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சு தேர்வு

நமீபியா கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.

தினத்தந்தி

புலவாயோ,

நமீபியா கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற ஜிம்பாப்வே முனைப்பு காட்டும். அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்த்ல் வெற்றிக்காக நமீபியா கடுமையாக போராடும்.

இதன் காரணமாக இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்