கிரிக்கெட்

3-வது 20ஓவர் போட்டி: இந்திய பெண்கள் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி

இன்று நடந்த 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா பெண்கள் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

தினத்தந்தி

ஓவல் ( ஆஸ்திரேலியா )

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

2 -வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்நிலையில் இன்று 3 வது 20 ஓவர் போட்டி நடைபெற்றது இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார் .

அதன் படி முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக பெத் மூனி அதிரடியாகி விளையாடி 43 பந்துகளில் 61 ரன்களும் , தஹ்லா மெக்ராத் 31 பந்துகளில் 44 ரன்களும் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய பெண்கள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து135 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது .இந்திய அணியில் அதிகபட்சமாக மந்தனா 49 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.

இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட 20ஓவர் தொடரில் 2-0 என

ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது .

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?