கிரிக்கெட்

ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்..! ஒரு பந்தில் உலக சாதனையை தவற விட்ட வில் ஜேக்ஸ்..வீடியோ

5 சிக்சர்கள் பறக்கவிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2023 டி20 ப்ளாஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஜூன் 22ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் சர்ரே மற்றும் மிடில்சக்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மிடில்சக்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சர்ரே அணி 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் சேர்த்தது.

அதைத்தொடர்ந்து 253 என்ற கடினமான இலக்கை துரத்திய மிடில்சக்ஸ் அணி 19.2 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சர்ரே அணியின் பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் 5 பந்திகளில் 5 சிக்சர்களை விளாசி சாதனையை படைத்தார்.

கடைசி பந்தில் சிக்சர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புல் டாஸ் பந்தை தவற விட்டு சிங்கிள் மட்டுமே எடுத்தார். அதன் காரணமாக முதல் 5 பந்துகளில் 5 சிக்சர்களை அடித்த அவர் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற யுவராஜ் சிங், ஹெர்சல் கிப்ஸ், கைரன் பொல்லார்ட் ஆகியோரின் உலக சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார்.

5 சிக்சர்கள் பறக்கவிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்