கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான தொடர்: வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் காயத்தால் விலகல்

வங்காளதேச கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் இரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 13-ந் தேதி நடக்கிறது.

தினத்தந்தி

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 13-ந் தேதி நேப்பியரில் நடக்கிறது. இந்த நிலையில் வங்காளதேச பிரிமியர் லீக் இறுதிப்போட்டியில் நேற்று முன்தினம் ஆடிய டாக்கா டைனமிட்ஸ் அணியின் கேப்டனான வங்காளதேச அணியின் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன், திசரா பெரேரா பந்து வீச்சில் இடது கை மோதிரவிரலில் காயம் கடைந்தார். எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் ஷகிப் அல்-ஹசனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.

இதற்கிடையே வங்காளதேச அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 2 போட்டிக்கான அணியில் இருந்து காலின் முன்ரோ நீக்கப்பட்டுள்ளார். 3-வது ஒருநாள் போட்டியில் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக காலின் முன்ரோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் காயம் காரணமாக ஆடாத மார்ட்டின் கப்தில் அணிக்கு திரும்பி இருக்கிறார். கடைசி ஒரு நாள் போட்டியில் டாம் லாதம் கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்