கிரிக்கெட்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அமெரிக்க வீரர் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அமெரிக்க வீரர் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை.

ஓமன்,

ஓமனில் நேற்று நடந்த பப்புவா நியூ கயானாவுக்கு எதிரான 2-வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் ஆடிய அமெரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர் ஜஸ்கரன் மல்கோத்ரா 124 பந்துகளில் 4 பவுண்டரி, 16 சிக்சருடன் 173 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் கடைசி ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் காடி டோகா பந்து வீச்சில் 6 பந்துகளையும் சிக்சருக்கு தூக்கி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த 2-வது வீரர், ஒட்டு மொத்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். 31 வயதான ஜஸ்கரன் மல்கோத்ரா இந்தியாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை