கிரிக்கெட்

ஆஷஸ் தொடர்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு, மழையால் ஆட்டம் பாதிப்பு

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசி வருகிறது.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று துவங்கியுள்ளது. பகல்-இரவு மோதலான இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.

ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் சேர்த்து இருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை