கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்ஹார் ஆப்கன் மீண்டும் கேப்டனாக நியமனம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்ஹார் ஆப்கன் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் நேற்று நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 2 மாதத்திற்கு முன்பாக கேப்டன் பதவியில் இருந்து கழற்றிவிடப்பட்ட அஸ்ஹார் ஆப்கன் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன்ஷிப்பில் கடந்த 7 மாதங்களில் நிகழ்ந்த 3-வது மாற்றம் இதுவாகும். துணை கேப்டனாக ரஷித்கான் பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

31 வயதான அஸ்ஹார் ஆப்கன் ஆப்கானிஸ்தான் அணிக் காக 111 ஒரு நாள் போட்டி, 66 இருபது ஓவர் ஆட்டம் மற்றும் 4 டெஸ்டுகளில் விளையாடி இருக்கிறார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்