கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட்: இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 ஒரு நாள் போட்டி, ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று டெஸ்டுகளில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் நவம்பர் 6-ந்தேதி காலேயில் தொடங்குகிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அலஸ்டயர் குக் ஓய்வு பெற்று விட்டதால் அவரது இடத்திற்கு புதுமுக தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் தேர்வாகியுள்ளார்.

இதே போல் பேட்ஸ்மேன் ஜோ டென்லி, வேகப்பந்து வீச்சாளர் ஆலிவர் ஸ்டோன் முதல்முறையாக டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். இங்கிலாந்து டெஸ்ட் அணி வருமாறு:- ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் குர்ரன், ஜோ டென்லி, ஜென்னிங்ஸ், ஜாக் லீச், ஆலிவர் போப், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ், ஆலிவர் ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை