கிரிக்கெட்

107-வது பிறந்த நாளை கொண்டாடிய கிரிக்கெட் வீராங்கனை

கிரிக்கெட் வீராங்கனை எய்லீன் ஆஷ், தனது 107-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

தினத்தந்தி

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை எய்லீன் ஆஷ் நேற்று தனது 107-வது பிறந்த நாளை கொண்டாடினார். இங்கிலாந்து அணிக்காக 7 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கும் பந்து வீச்சாளரான எய்லீன் ஆஷ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியவர்களில் உயிருடன் உள்ள அதிக வயது வீராங்கனை ஆவார். கடந்த 30 ஆண்டுகளாக அவர் யோகா பயிற்சி மேற்கொள்கிறார். தற்போதைய இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹீதர் நைட்டுடன் இணைந்து அவர் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்