கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த பார்த்தீவ் படேல்.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி 14-ம் தேதி தொடங்க உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது.

இது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரரான பார்த்தீவ் படேல் தேர்வு செய்துள்ளார். சுப்மன் கில் தலைமையிலான அந்த அணியில் சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 2 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பார்த்தீவ் படேல் தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவன்:

ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், நிதிஷ் ரெட்டி அல்லது துருவ் ஜூரெல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்