கிரிக்கெட்

ஐ.சி.சி. தரவரிசை 16 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் முதலிடம் பிடித்த மிதாலி ராஜ்

ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் 16 ஆண்டுகளுக்கு பின் மிதாலி ராஜ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அணிக்கான கேப்டன் மிதாலி ராஜ், ஐ.சி.சி. மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சமீபத்திய வாராந்திர தரவரிசை பட்டியல் வெளியீட்டில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கடைசி 3 ஆட்டங்கள் கணக்கில் கொள்ளப்பட்டு தரவரிசை புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

இதில் பெரிய ஸ்கோரை குவிக்காத வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஸ்டெபானி டெய்லர் (49 மற்றும் 21 ரன்கள்), 30 புள்ளிகளை இழந்து முதலிடத்தில் இருந்து இறங்கியுள்ளார்.

இதனால், 762 புள்ளிகளை கொண்ட மிதாலி ராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் பேட்டிங் தரவரிசையில் முதன்முதலாக 16 ஆண்டுகளுக்கு முன்பு முதலிடம் பிடித்தார். இவர் முதலிடம் பிடிப்பது தற்போது 9வது முறையாகும்.

வெஸ்ட் இண்டீசின் டெய்லர், கணக்கில் கொள்ளப்பட்ட 3 போட்டிகளில் விக்கெட் எதுவும் கைப்பற்றாத நிலையில், பந்து வீச்சாளர்கள் தரவரிசையிலும் முதல் இடத்தில் இருந்து 3 இடங்கள் இறங்கியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்