கிரிக்கெட்

ஓவல் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி

ஓவல் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்திய அணி உள்ளது.

தினத்தந்தி

ஓவல்,

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி இந்திய அணியைவிட 99 ரன்கள் முன்னிலை பெற்றது.

99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்து இருந்தது. 3 ஆம் நாளான நேற்று சிறிது நேரம் தாக்குப் பிடித்த கேஎல் ராகுல் 46 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா சதம் விளாசினர். ரோகித் சர்மாவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த புஜாராவும் அரைசதம் விளாசினார்.

ரோகித் சர்மா 127 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த சில நிமிடங்களில் புஜாராவும் 61 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்தடுத்து இரு முக்கிய விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுத்த நிலையில், கேப்டன் கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

போதிய வெளிச்சமின்மை காரணமாக 3-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்திக்கொள்ளப்பட்டது. 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்தது. விராட் கோலி 22 ரன்களிலும் ஜடேஜா 9 ரன்களிலும் களத்தில் இருந்தனர். இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில், 4-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் ஜடேஜா (17 ரன்கள்) எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரஹானேவும் (0) ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய கேப்டன் விராட் கோலி 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மொயீன் அலி பந்து வீச்சில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் ஷர்துல் தாக்குர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தற்போதைய நிலவரப்படி, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் குவித்துள்ளது. பண்ட் 32 ரன்களுடனும், ஷர்துல் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனால், இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்தை விட 264 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு