போர்ட் ஆப் ஸ்பெயின்,
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இன்று 2வது போட்டி அதே மைதானத்தில் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்கிறது. இந்நிலையில் மழையால் ஆட்டம் தாமதம் அடைந்துள்ளது.