கிரிக்கெட்

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதிப்பு

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. #INDvsAUS

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட இந்த 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி இன்று 2வது ஆட்டத்தில் களம் இறங்கியது. இந்தியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. மழை காரணமாக ஆட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டுள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை