கிரிக்கெட்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 2-வது 20 ஓவர் போட்டியில் இன்று மோதல்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

தினத்தந்தி

பாசட்டரே,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் 190 ரன்கள் குவித்து எதிரணியை 122 ரன்னில் மடக்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் ஆதிக்கத்தை தொடரும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

அதே வேளையில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்காகவும், முதல் வெற்றிக்காகவும் கடுமையாக போராடும். தொடக்க ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு பதிலடி கொடுக்க முயற்சிப்பார்கள். எனவே, இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு