சென்னை,
ஐபிஎல் 2026 தொடக்கம் முதலே ரசிகர்களுக்கு பரபரப்பான அனுபவத்தை வழங்கி வருகிறது. அதிரடி பேட்டிங், அசத்தல் பந்துவீச்சு மற்றும் மேஜிக் கேட்ச்சுகள் என ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
ஆனால் முதல் நான்கு போட்டிகளில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. முதல் நான்கு போட்டிகளிலும் ஒரே மாதிரியான முடிவுகள் பதிவாகியுள்ளன.
ஹோம் அணிகள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. டாஸ் வென்ற கேப்டன்கள் அனைவரும் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளனர். அவர்களே போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த 3 அம்சங்களும் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளிலும் ஒரே மாதிரியாக நிகழ்ந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த போட்டிகளில் ஆர்சிபி, மும்பை, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் வெற்றி பெற்றன. ஐதராபாத், கொல்கத்தா, சென்னை மற்றும் குஜராத் அணிகள் தோல்வியடைந்தன.
கிரிக்கெட்டில் இவ்வாறு ஒரே மாதிரியான முடிவுகள் தொடர்ச்சியாக நிகழ்வது அரிதானது எனவும், இதனால் ஐபிஎல் சுவாரசியமாக மாறியுள்ளது எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.