Image Courtesy : IPL / Twitter 
கிரிக்கெட்

20 ஓவர் போட்டிகளில் 250 விக்கெட்கள்- பும்ரா புதிய சாதனை..!!

250 விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 65-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஐதராபாத் அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் 250 விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

223 விக்கெட்களுடன் இந்த பட்டியலில் புவனேஸ்வர் குமார் 2-வது இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த பட்டியலில் பும்ரா 5-வது இடத்தில் உள்ளார். அதாவது பும்ரா-வுக்கு முன்னதாக 250 விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஷ்வின் (274), யுஸ்வேந்திர சாஹல் (271), பியூஷ் சாவ்லா (270), அமித் மிஸ்ரா (262) ) என 4 சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு