Image Courtesy: @ProteasMenCSA  
கிரிக்கெட்

கடைசி ஒருநாள் ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு...!

தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

தினத்தந்தி

ஜோகன்ஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் இதுவரை 4 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-2 என தொடர் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்