Image Tweeted By @BCCI 
கிரிக்கெட்

கடைசி டி20 போட்டி : இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்..!!

நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தினத்தந்தி

நாட்டிங்காம்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. தொடரை இழந்துவிட்ட போதிலும் ஆறுதல் வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி இன்று களமிறங்குகிறது. அதே நேரத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்