image tweeted by @CricCrazyJohns 
கிரிக்கெட்

லெஜன்ட்ஸ் லீக் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகாராஜாஸ் அணி வெற்றி

இந்திய மகாராஜாஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

கொல்கத்தா,

ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் 4 அணிகளாக பங்கேற்கும் லெஜன்ட்ஸ் லீக் டி20 தொடர் தொடங்கியது. இதையொட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு காட்சிப் போட்டியில், இந்திய மகாராஜாஸ் மற்றும் வேர்ல்டு ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த வேர்ல்டு ஜெயன்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்தது. பின்பு விளையாடிய இந்திய மகாராஜாஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இந்நிலையில் இன்று கொல்கத்தாவில் தொடங்கும் முதல் போட்டியில், கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியும், ஷேவாக் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் மோதவுள்ளன.

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு