Image Tweeted By @MICapeTown 
கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா டி20 லீக்: வீரர்கள் ஏலத்தில் அசத்திய எம்.ஐ. கேப் டவுன் அணி- வீரர்கள் விவரம்..!!

தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் பல அதிரடி வீரர்களை கேப் டவுன் அணி வாங்கியுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

அந்த வகையில் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. இதே போல் கேப்டவுன் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. இந்த அணிக்கு எம்.ஐ கேப் டவுன் என பெயரிட்டுள்ளனர்.

கேப் டவுன் அணி முதல் கட்டமாக ஏற்கனவே 5 முக்கிய வீரர்களை ஒப்பந்தம் செய்து இருந்தது. ககிசோ ரபாடா, சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், ரசித் கான், டெவல்ட் பிரிவிஸ் என 5 வீரர்களை கேப் டவுன் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிலையில் நேற்று நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் பல அதிரடி வீரர்களை கேப் டவுன் அணி வாங்கியுள்ளது.

அதன்படி எம்.ஐ கேப் டவுன் தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் வெண்டர் டுசனை ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய்க்கும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓடியன் ஸ்மித்தை 72 லட்சம் ரூபாய்க்கும் எம்.ஐ. கேப் டவுன் அணி ஏலத்தில் எடுத்தது. இதே போன்று தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் பியூரான் ஹேண்ட்டிரக்ஸ், ரியான் ரிக்கல்டன், ஜார்ஜ் லிண்டே ஆகியோரை கேப் டவுன் அணி ஏலத்தில் எடுத்தது.

எம்ஐ கேப் டவுன் அணி விவரம்:-

ரபாடா, டிவால்ட் பிரவீஸ், ரஷித் கான், லியாம் விலிங்ஸ்டோன், சாம் கரண், வெண்டர்டுசன், ரியான் ரெக்கல்டன், ஜார்ஜ் லிண்டே, பியூரான் ஹெண்டரிக்ஸ், டுவான் ஜென்சன், டிலானோ, கிராண்ட் ஃரோபிலோசன், வீஸ்லி மார்ஸ்ஷல், ஒலி ஸ்டோன், வகார் சலாம்கியில், ஷியாத் அப்ரஹாம், ஒடியன் ஸ்மித்

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு