அதிகபட்சமாக தினேஷ் சன்டிமால் 76 ரன்களும், தீக்ஷனா 38 ரன்களும் எடுத்தனர்.பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசிர் ஷா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் ஆட்ட நேர முடிவில் 18 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.