சென்னை,
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களில் ஜடேஜா முதலிடத்தில் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஜடேஜா இதுவரை 186 போட்டிகளில் விளையாடி 140க்கும் மேல் விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
2011 முதல் 2022 வரை சிஎஸ்கே அணிக்காக 116 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பிராவோ 140 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். தற்போது ஜடேஜா மற்றும் பிராவோ ஆகியோர் மட்டுமே சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரில் 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்துள்ள பந்துவீச்சாளர்களாக உள்ளனர்.
இந்த பட்டியலில் அடுத்த இடத்தில் அஸ்வின் 95 விக்கெட்டுகளுடன் உள்ளார். அவரைத் தொடர்ந்து தீபக் சஹார் 76 போட்டிகளில் 76 விக்கெட்டுகளும், ஆல்பி மார்கெல் 76 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.